Featured Home (TOP)

Recent Comments

Tuesday, March 31, 2015

Unknown

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு NFGG அனுப்பிய கடிதத்திற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பிய மறுப்புக் கடிதத்தின் தமிழாக்கம்

                                                                                                                                              (முகவாி)
அம்மணி

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் (பா.உ.) தொடர்பாக

இல. 10/18, லேக் வீதி, கொழும்பு 8 இல் வசிக்கும் பா.உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எனது கட்சிக்காரரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பின் வரும் விடயங்களை உங்கள் கவனத்திற்கு எழுதுகின்றேன்.

01 நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நபர்களினால் (அவ்வாறான ஒரு அமைப்பு இருப்பதாக நாம் ஏற்றுக் கொள்ளவில்லை) எனது கட்சிக்காரர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டும் முறைப்பாடொன்றினை 11.03.2015 ஆம் திகதியளவில் சமர்ப்பித்துள்ளார்கள்.
Read More
Unknown

மட்டு-குருக்கள்மடம் புதை குழியினை விரைவாக தோண்டுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவு

Read More
Unknown

காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 13 மாணவிகளும், 2 மாணவர்களும்- 9 ஏ சித்தி -

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நேற்று வெளியான 2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்தில்; 13 மாணவிகளும்,  2 மாணவர்களும்  9 ஏ சித்தி பெற்றுள்ளதாக காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.
Read More
Unknown

காத்தான்குடியில் அமைக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அருங்காட்சியத்தில் உருவச்சிலைகள்! பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜம்இய்யதுல் உலமாவின் தலைவருக்கு அழைப்பு


(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடியில் அமைக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய நூதனசாலை, எதிா் வரும்  (03ம் திகதி) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படலாம் என தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் எதிர்வு கூறியுள்ளதுடன், அங்கு 'உருவச் சிலைகளையும், உருவ பொம்மைகளையும் வைக்கலாம்' எனக் கூறி பத்வாவை வழங்கி வரும் ஆலிம்களான காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் SM அலியார் பலாஹி, ALM மும்தாஸ் (மதனி), MAM மின்ஹாஜ் (பலாஹி) மற்றும் ஊடகவியலாளர் MSM முஸ்தபா (பலாஹி), காத்தான்குடி இளம் உலமாக்கள் முன்னணியைச் சேர்ந்த ஆலிம்களுக்கு இன்று 30ம் திகதி திங்கட்கிழமை தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் மேற்படி விடயம் தொடர்பில் பகிரங்கமாக விவாதிப்பதற்கான அழைப்புக்களையும் நேரடியாகக் கையளித்துள்ளனர்.
Read More
Unknown

மாணவி ஆயிசாவின் மரணத்தால் சக மாணவ சமூகம் சோகத்தில்

ஏ.எல்.டீன்பைரூஸ்-

காத்தான்குடி மீரா பாலிகா மஹா வித்தியாலயத்தில் தரம் எட்டாம் ஆண்டில்  கல்வி கற்று வந்த மாஹிர் ஆயிஷா என்ற மாணவி சுகயீனம் காரணமாக கடந்த 29.03.2015  ஞாயிறு கொழும்பு  வைத்திய சாலையில்  காலமானார்.

இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர்
எம்.ஐ.எம்.மாஹிர் மற்றும்  காத்தான்குடி மீரா பாலிகா மஹா வித்தியாலயத்தின் ஆசிரியை  எம்.ஐ.உம்மு சல்மா ஆகியோர்களின் ஒரே மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More
Unknown

குறுக்கள்மட மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை...


குறுக்கள்மட மனிதப்புதைகுழி தோண்டப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியான வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஏற்கனவே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தினை பூமிக்கு கீழேயுள்ள எச்சங்களை கண்டறிய ஸ்கேன் கருவியினூடாக குறிப்பிட்ட அந்த பகுதியினை ஆய்வு செய்யுமாறு களுவான்சிகுடி சுற்றுலா நீதி மண்ற நீதவான் கௌரவ ரியால் அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள்.
Read More

Monday, March 30, 2015

Unknown

2014ம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு காத்தான்குடி பிரதேச கல்விப் பணி்ப்பாளரின் வாழ்த்துச்செய்தி


(ஏ.எல்.டீன்பைரூஸ்)

2014ம் ஆண்டு க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும்,அதிபர்கள்,ஆசியர்களுக்கும் காத்தான்குடி பிரதேச கல்விப்பணி்ப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

மேற்படி பெறுபேறானது காத்தான்குடி பிரதேச கல்வி அலுவலகத்தின் சிறப்பான வழிகாட்டல்களுடன் பாடசாலைகளின் அதிபர்கள்,கற்பித்த ஆசியர்களின் மகத்தான பணிக்கு கிடைத்த வெற்றியாகும்.டிஇதனை நாம் இலகுவில் மறந்து விட முடியாது.
Read More
Unknown

2014ம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் வாழ்த்துச்செய்தி


கடந்த 2014ம் ஆண்டு நடந்தக.பொ.த.சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தொிவித்தாா்


இதுவரை கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய
பாடசாலையில் ஒன்பது A தர சித்தியுடன் ஒன்பது மாணவிகளும் மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஒன்பது A தர சித்தியுடன் மூன்று மாணவிகளும் அல்ஹிறா வித்தியாலயத்தில் ஒன்பது A தர சித்தியுடன் இரண்டு மாணவர்களும் அல் அமீன் வித்தியாலயத்தில் ஒன்பது A தர சித்தியுடன் ஒரு மாணவியும் மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர்.
Read More
Unknown

கட்டாரில் ‘அல்லாஹ்வின் அருள்’ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு

(கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி)

கட்டாரில் ‘அல்லாஹ்வின் அருள்’ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு இன்று 30 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளையில் இடம்பெறும்.
இதில் அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
 
இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.


Read More
Unknown

வெசாக் தினத்துக்கு பின்னர் பாராளுமன்றம் கலைப்பு : ஜூன் இறுதிப்பகுதியில் தேர்தல் ?

எதிர்வரும் மே மாதம்   முற்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு   ஜூன் மாதம் இறுதிப் பகுதியில்  பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான தேசிய அரசாங்கம்  தீர்மானித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. 
பெரும்பாலும்  வெசாக் போயா தினத்தின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும்    பாராளுமன்றத் தேர்தலானது தற்போதைய விகிதாசார முறையிலேயே நடைபெறும் என்றும்  அரசாங்க  தரப்பிலிருந்து தெரியவருகின்றது.  
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அந்தவகையிலேயே எதிர்வரும் மே மாதம் வெசாக் போயா தினத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து    தேர்தலை ஜூன் மாதம் இறுதியில் நடத்துவதற்கு  அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
இந்நிலையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனை நிறைவேற்றிய பின்னர்  பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என   தெரிவிக்கப்படுகின்றது. 
 எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு  முன்னர் தேர்தல் முறையில் மாற்றம் வராது என்றும்    தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான   ஆரம்பகட்ட நடவடிக்கைககள் மட்டுமே   தேர்தலுக்கு  முன்னர் எடுக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்படுகின்றது. 
அந்தவகையில் ஐககிய தேசிய கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள்  விடுதலை முன்னணி மலையக கட்சிகள்  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள்  பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. 
 Virkesary
Read More
Unknown

O/L பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது இணையத்தில்..


க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2014 ஆம் ஆண்டின் பெறுபேறுகள் தற்பொழுது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
Read More
Unknown

எமது காணிப்பிரச்சினைகளை தீர்த்துத் தாருங்கள் கிழக்கு மாகாண ஆளுனரிடம் அமைப்பாளர் முபீன் வேண்டுகோள்

 (ஏ.எல்.டீன் பைரூஸ்-)

கடந்த 22.03.2015 ஞாயிற்றுக் கிழமை ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட காணிப் பிரச்சினைகளை தீர்க்கும் விஷேட கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. 

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனான்டா கலந்து கொண்டு மக்கள் எதிர் நோக்கும் காணிப் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்கினார்.
Read More

Sunday, March 29, 2015

Unknown

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் : காலி முகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்கள் அணிந்து மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணிப்­பதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்கள் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் முற்­றாகத் தடைசெய்­யப்­பட்­டுள்­ளது என பொது ஒழுங்­குகள் அமைச்சர் ஜோன் அம­ர­துங்க தெரிவித்திருந்தார்.
Read More
Unknown

காத்தான்குடி தோனா மற்றும் வடிகான் அபிவிருத்தி தொடர்பில் யு.எல்.எம்.என்..முபீன் தீவிர முயற்சி...அமைச்சர் றவுப் ஹக்கீம் அங்கீகாரம்.

(-ஏஎல்.டீன்பைரூஸ்-)

காத்தான்குடி பிரதேசத்திற்கான வெள்ள தடுப்பு நடவடிக்கையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான அமைச்சர் றவுப் ஹக்கீம் மேற்கொண்டு வருகின்றார்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளரும் அமைச்சரின் இணைப்பு செயலாளருமான  யு.எல் எம்..என்.முபீன் அவா்களின் வேண்டுகோளின் போில் மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இவ்வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பெரிய தோனா, சிறிய தோனா மற்றும் அவசியமான இடங்களில் வடிகான் அமைத்தல் ஆகிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கபபடவுள்ளன.

கடநத் 12.02.2015 அன்று அமைச்சில் நடைபெற்ற இது தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் இவ்வேலைத்திட்டம் தொடர்பில் உரிய நடவடிக்ககைகளை மேற் கொள்ளுமாறு அமைச்சர் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அமைச்சரின் இனணப்பு செயலாளர் யு.எல்.என்.எம்.முபீன் அவா்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற மேற்படி கூட்டத்தில் காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சல்மான், பிரதி பிரதம முகாமையாளர் அமரசிங்க, பிரதம திட்ட வரைஞர் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மஜீட், திணைக்களத்தின் பணிப்பாளர திரு ;வெளியப்பளய, கரையோர பாதுகாப்பு  திட்ட பணிப்பாளர் பிரேமதிலக உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி, கல்முனை, அட்டாளைச்சேனை, சாய்நதமருது, கிண்ணியா ஆகிய பிரதேசங்களுக்கான வடிகான் மற்றும் தோனா நிர்மாணிப்பு தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.


வருடாந்தம் காத்தான்குடி தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலமையினையும் அதன் தாக்கங்களையும்  யு.எல்.என்.எம்.முபீன் சுட்டிக்காட்டினார்.

காணிமீட்பு  அபிவிருத்தி கூட்டடுத்தாபன உயர் அதிகாரிகளுக்கு காத்தான்குடிக்கான முழுமையான தோனா வடிகான திட்ட அறிக்கையினையும் ,மதிப்பீட்டையும் விரைவில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். 

தொடராக நடைபெற்று வந்த பல்வேறு கூட்டங்களின் பின்னர் காத்தான்குடிக்கான முழுமையான  மதிப்பீட்டு அறிக்கையினை  கடந்த 16.03.2015 அன்று அமைச்சர் றவுப் ஹக்கீம் இடம் யு.எல்.என்.எம்.முபீன் ஊடாக சமர்பித்தனர். 

இதன் மொத்த பெறுமதி 2 பில்லியன்களாகும். இதற்கான நிதியினை பெற்றுக் கொள்ள கடந்த 25.03.2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீன விஜயத்தின் மூலமாக நிதியை பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கையினை அமைச்சர் ஹக்கீம் மேற் கொண்டார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் றவுப் ஹக்கீம் அவர்களுக்கும் இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கு முன்னதாக நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சில் இடம் பெற்றது.

இச்சந்திப்பில்  கொழும்பில் தடைப் பட்டிருக்கும் (fort city )சீன கடல் நகர அபிவிருத்தி திட்டம்  தொடர்பில் அத்திட்டத்தினை  மீள ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சர் றவுப் ஹக்கீம் தங்களுக்கு உதவ வேண்டும் என்பதுடன் இது தொடர்பாக பாராளு மன்றத்திலும் தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும என்றும் அமைச்சர் றவுப் ஹக்கிமிடம் சீன தூதுவர் வேண்டிக் கொண்டார்.

அதற்கு சாதகமாக பதில் அளித்த அமைச்சர் இது தொடர்பில தான் முக்கிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அதே நேரத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்திற்கு சீன அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் அமைச்சர் றவுப் ஹக்கீம் கோரிக்ககை  வைத்தார்

(fort city) அபிவிருத்திக்கான  செலவு 1.6 பில்லியன்; மாத்திரமே ஆனால்  காத்தான்குடி தோனா மற்றும் வடிகான் அபிவிருத்திற்கு தேவைப்படுவதோ 2 பில்லியன் ஆகும்.

ஜனாதிபதியுடன்  சீனாவுக்கான  விஜயம் மேற் கொன்டுள்ள அமைச்சர் றவுப் ஹக்கீம் இவை தொடர்பில் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளரும் அமைச்சரின் இணைப்பு செயலாளருமான  யு.எல்.எம்.என்..முபீன் தெரிவித்தார்.

Read More

Saturday, March 28, 2015

Unknown

அஞ்சற்காரர்களை ஒன்லைன் வலையமைப்புடன் இணைத்துள்ளதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம்-காத்தான்குடியில்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு தங்களது சேவைகளை இலகுபடுத்தும் நோக்குடன் அஞ்சற்காரர்களை ஒன்லைன்; வலையமைப்புடன் இணைத்துள்ளதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் 28 இன்று சனிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி தபாலகம் மற்றும் புதிய காத்தான்குடி உப தபாலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச தபால் அதிபர் கே.எம்.மஸாஹிர் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் அதிபர் வி.விவேகானந்தலிங்கம்,மட்டக்களப்பு பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.ஜெகன் உட்பட காத்தான்குடி தபாலகம் மற்றும் புதிய காத்தான்குடி உப தபாலகங்ளில் கடமையாற்றும் அஞ்சற்காரர்கள்,உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Read More
Unknown

"காத்தான்குடி நகரசபை தவிசாளர் தெரிவித்திருக்கும் கருத்து வேடிக்கையானது; அவர் ஒத்துழைத்தால் ஊழல் மோசடிகளை நிரூபிக்க தயார்" நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)


"காத்தான்குடி நகரசபையினை ஊழல்-மோசடிகள் எதுவுமின்றி கடந்த நான்கு ஆண்டுகளாக தான் நிர்வகித்ததாக அதன் தவிசாளர் தெரிவித்திருக்கும் கருத்து அப்பட்டமான பொய் மாத்திரமின்றி வேடிக்கையான ஒன்றுமாகும். 
மீண்டும் மீண்டும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற முயற்சிகளை கைவிட்டு, நகரசபையின் நடவடிக்கைகளை முழுமைமான நிதிப்பரிசோதனைக்கும் தொழில் நுட்ப ஆய்வுக்கும் உட்படுத்த அவர் முன்வர வேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (28.3.2015) ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
Read More
Unknown

NFGG ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டு தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் தனது சட்டத்தரணிகள் ஊடாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதப் பிரதிகள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டு தொடர்பில் - பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தனது சட்டத்தரணிகள் ஊடாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு 25-03-2015ம் திகதி அன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேற்படி கடிதத்தின் பிரதி பாராளுமன்ற சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதி எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றது.






.
Read More
Unknown

அமைச்சர் ரிஷாத் பதியுதீன்- அன்வர் முஸ்தபா சந்திப்பு கூறி நிற்கும் அரசியல் கதை இதுதான்!

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
பொத்துவில் பிரதேசத்திற்கான இளைஞர் அமைப்பாளராக எம்.ஐ.எம்.சஹூட் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரிஷாத் பதியுதீனினால் நியமிக்கப்பட்டுள்ளார்
Read More
Unknown

அல்குர்ஆன் பயிற்சி மன்றமும் பாராட்டு நிகழ்வும்



(-ஏஎல்.டீன் பைரூஸ்-)

காத்தான்குடி தஜ்வீதுல் குர்அன் பயிற்சி கல்லுரியின் 2015ம் ஆண்டிக்கான முதலாவது பயிற்சி  மன்றமும் பாராடடு நிகழ்வும் (2015.03.27 வெள்ளி) முகைதீன் மெத்தை  பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் புஹாரி மண்டபத்தில்; தலைவர் அல்ஹாஜ் றவுப் ஏ மஜீட் தலைமையில் நடைபெற்றது.

மாணவர்கள் தங்களின் ஆரம்ப வயதிலிருந்தே அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓத குறு;றுக் கொள்ள வேண்டும் என்ற தூர நோக்;குடன் சுமார் கால் நூற்றாண்டு முன் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த வுர்யுதுறுநுநுனுர்ருடு  ஞசுயுN  வுசுயுஐNஐNபு  ஊநுNவுநுசு
Read More

Friday, March 27, 2015

Unknown

துவிச்சக்கரவண்டிகளில் எதிரொளி விளக்குப் பாதுகாப்பு ஸ்ரிக்கரினை ஒட்டும் நாடளாவிய வேலைத்திட்டம் -காத்தான்குடி பொலிஸ் பிரிவிலும் ஆரம்பம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையும் இலங்கை பொலிஸூம் இணைந்து விபத்துக்களற்ற நாடொன்று எனும் தொனிப்பொருளில் துவிச்சக்கரவண்டிகளில் எதிரொளி விளக்குப் பாதுகாப்பு ஸ்ரிக்கரினை ஒட்டும் நாடளாவிய வேலைத்திட்டம் 26 இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்றது.
Read More

Thursday, March 26, 2015

Unknown

காத்தான்குடி நகர சபைத் தவிசாளருக்கு பகிரங்க சவால்!

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

காத்தான்குடி நகர சபையில் கடந்த நான்காண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை நிரூபிக்க நான் தயார். எனது சவாலுக்கு முகங்கொடுக்க நீங்கள் தயாரா? என ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் பகிரங்க சவால் விடுத்து ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளார்.


அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:  

ஊழல் மோசடியற்ற வகையில் காத்தான்குடி நகர சபையை கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிறப்பாகச் செய்து வந்துள்ளதாக காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் கடந்த 24ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நகர சபை அமர்வில் தெரிவித்திருக்கிறார். 



இதனை ஊடகவியலாளர்களும் அவர்களின் பொறுப்பிலுள்ள இணையதளங்கள், அச்சு ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவமளித்து வெளியிட்டுள்ளனர்.


தவிசாளரின் இந்தக்கூற்றானது வெளியூர்வாசிகளுக்கு பெரிதும் வியப்பான செய்தியாக இருந்தாலும், உள்ளுர் மக்களுக்கு இது மகா பொய்யான செய்தி என்பது தெரிந்ததேயாகும். 


சிலவேளை உள்ளுர் மக்களுக்கும் இதில் சந்தேகமிருந்தால் நான் எமதூர் நகர சபையில் கடந்த நான்காண்டுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள், மோசடிகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் என்பவற்றைப் பட்டியலிட்டு முன்வைக்கவும், அதுதொடர்பில் தவிசாளருடனும், ஏனைய ஆளுந்தரப்பு உறுப்பினர்களுடனும் இந்த ஊர்ப் பிரமுகர்கள் முன்னிலையில் பகிரங்கமாக நிரூபிக்கவும் தயாராக இருக்கிறேன்.

தவிசாளரின் மேற்படிக் கூற்றினைப் படித்தபோது, 'மல நாற்றத்துடன் வருகின்ற ஒருவன், என் பின்புறம் மணக்கிறது' என்று கூறுவதையொத்த கதையாகவே எனக்கு விளங்கியது.


இவர்கள் நகர சபையைப் பொறுப்பெடுத்தபோது திண்மக்கழிவகற்றல், மடுவம், வடிகான் பிரச்சினைகளுடன் பொறுப்பேற்றதாகவும், இவர்களின் நான்காண்டு கால ஆட்சியில் அம்மூன்று பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டிருப்பதாகவும் தவிசாளர் உளறியிருக்கிறார்.


40 கிலோ மீட்டருக்கு தமது ஆட்சிக்காலத்தில் வடிகான்களை நிர்மானித்திருப்பதாக தவிசாளர் கூறியிருப்பது என்னவோ உண்மையாக இருக்கலாம். அதனையும் நாம் சரியாக அளந்துதான் பார்க்க வேண்டும். 


ஆனால் அந்த வடிகான்களில் கழிவு நீரும், மழைக் காலஙகளில் பெருக்கெடுத்து வரும் வெள்ள நீரும் வடிந்து ஓடுகின்றதா? கழிவு நீரும், வெள்ள நீரும் வடிந்தோட முடியாதவாறு 40 கிலோ மீட்டர் நீள வடிகான்களை இவர்கள் தமது வியாபார அரசியல் நலன் கருதிக் கட்டியிருப்பார்களே தவிர, இந்த வடிகான்களால் எமது ஊருக்கும், வரியிறுப்பாளர்களுக்கும் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?


இதுபோன்றுதான் இவர்களது ஏனைய விவகாரங்களும் உள்ளன. இது குறித்து எதிர்க்கட்சியான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகர சபை உறுப்பினர்கள் சபையில் என்ன கருத்தைத் தெரிவித்தனர் என்பது தெரியவில்லை. 


சபை அமர்வில் தவிசாளர் இவ்வாறெல்லாம் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகியே இருந்துள்ளனர். தவிசாளரின் இக்கருத்து பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏதாவது எதிர்க் கருத்துக்களைக் கூறினார்களா? என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.


என்றாலும், இந்த ஊரைத் தளமாகக் கொண்டு கடந்த பத்தாண்டுகளாக ஒரு பத்திரிகையையும் வெளியிட்டு வருகின்ற நான், கடந்த நான்காண்டு கால நகர சபை ஆட்சியில் ஏகப்பட்ட ஊழல்களும், மோசடிகளும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினது அரசியல் அதிகார ஒத்துழைப்புடனும், மட்டக்களப்புப் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் பாரபட்சமானதும், உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படாததுமான ஒத்துழைப்புடனும் இடம்பெற்று வந்துள்ளன என்பதனை மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக விவாதித்து நிரூபிப்பதற்குத் தயாராக உள்ளேன்.


உண்மையில் தவிசாளர் சபை அமர்வில் கூறியதைப் போன்று கடந்த நான்காண்டுகளில் சிறப்பாக இந்த ஊரை நிர்வாகம் செய்திருப்பாரேயானால் அவர் எனது இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு உடனடியாக ஒரு மக்கள் மன்றத்தில் அவரது கூற்றினை நிரூபிப்பதற்கு முன்வர வேண்டும்.


நாட்டின் ஜனநாயக இறைமையைப் பேணி தனது உயிரையும் துச்சமாக மதித்து பயங்கரவாதத்தை இந்நாட்டில் இல்லாதொழித்ததுடன், நல்லாட்சி ஒன்றினை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை வழங்கிய 'ஃபீல்ட் மார்ஷல்' சரத் பொன்சேகா அவர்களின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டலம் சார்பில் இந்த சவாலினை நான் காத்தான்குடி நகர சபையின் சர்வாதிகாரமுள்ள தவிசாளருக்கு விடுக்கின்றேன். 


அதுமாத்திரமன்றி, இந்த நகர சபைக்கு வரிப்பணம் செலுத்துகின்ற ஒரு வரியிறுப்பாளன் நான் என்பதையும் அவர் மறுதலிக்க முடியாது. எனவே, எனது சவாலுக்கு அவர் தைரியமாக முகங்கொடுத்து அவரது எதிர்கால அரசியலை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு முன்வர வேண்டியது அவசியமாகும். 


அவ்வாறு ஏற்றுக் கொள்ளாமல், 'ஊழல் மோசடி செய்திருந்தால் கொழும்பிலுள்ள ஊழல் மோசடிப் பிரிவுக்குச் சென்று முறையிடுமாறு' வரட்டுக் காரணங்களைக் கூறி இச்சவாலை ஏற்பதற்கு மறுதலிப்பாராயின் அதுவே அவரது ஊழல் மோசடிமிக்க நிர்வாகத்திற்கு போதிய ஆதாரமாகும்.
Read More
Unknown

முன் அனுபவத்தைப் பெறவே தற்போது தேசிய அரசாங்கம்

நாட்டில் அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பின்னர் அமைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்­கத்­திற்­கான முன் அனு­ப­வத்தைப் பெறும் நோக்­கி­லேயே தற்­போது தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யுள்ளோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.
எனினும், ஏப்ரல் 23 ஆம் திக­திக்குப் பின்னர் பாரா­ளு­மன்றத் தேர்த­லுக்குச் செல்வோம். அந்த தேர்­தலின் பின்னர் முழுப் பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சாங்­க­மாக மாற்­றுவோம். அந்த தேசிய அர­சாங்­கத்­தி­னூ­டாக நாட்டின் எல்லாப் பாகங்­க­ளுக்கும் அபி­வி­ருத்­தியை கொண்டுசெல்வோம் எனவும் பிர­தமர் சுட்­டி­காட்­டினார்.
Read More
Unknown

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தினூடாக சுமார் ஒரு மில்லியன் வரையான வீட்டு சுற்றுச்சூழலை சோதனைக்கு உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவிக்கின்றார்.
நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார், இராணுவத்தினர், சமூக சேவை அமைப்புகள் மற்றும் சுகாதார ஊழியர்களும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்களை அடையாளங் கண்டு அவற்றினை அழிப்பதுடன் , நுளம்பு தொற்று தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நடவடிக்கைகயினை கண்காணிப்பதற்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் பபா பலிஹவடன சுட்டிக்காட்டியுள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் பத்தாயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுதாகவும், டெங்கு காய்ச்சளால் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Read More
Unknown

அல் மனார் நிறுவனமும், ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசனும் இணைந்து’ நடாத்தும் நாடளாவிய ரீதியிலான ‘பழாயிலுஸ் ஸஹாபா’ போட்டி நிகழ்ச்சி.


அல் மனார் நிறுவனமும், ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசனும் இணைந்து’ விடியலை நோக்கிய சமூகம்’ எனும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக ‘பழாயிலுஸ் ஸஹாபா’ போட்டி நிகழ்ச்சியொன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியாக இடம்பெறவுள்ள இப்போட்டிக்காகவென ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூல் இரண்டாம் பதிப்பாக பத்தாயிரம் பிரதிகளை வெளியிட்டு வைக்கும்
நிகழ்வு அண்மையில் இடம்பெற விருக்கிறது.
Read More

Wednesday, March 25, 2015

Unknown

முஸ்லிம்களுக்கு இடையூறு விளைவித்தோமா? நிரூபித்தால் ஜனாதிபதி வீட்டில் எடுபிடி வேலை செய்கின்றோம்: பொதுபல சேனா

பொது­பல சேனா அமைப்பு நாட்டில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்­த­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன லண்­டனில் குற்­றம்­சு­மத்­தி­யுள்ள நிலையில், இதனை பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் அவர் நிரூ­பித்து காட்­டினால் எமது அமைப்பை கலைத்து விட்டு நான் ஜனா­தி­பதி வீட்டில் எடுபிடி வேலை செய்ய தயா­ராக உள்ளேன். அதே­போன்று குறித்த குற்­றச்­சாட்டை நிரூ­பிக்க முடி­யா­விடின் ஜனா­தி­பதி, விகா­ரைக்கு வந்து எடு­பிடி வேலை­களை செய்ய வர வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஜனா­தி­ப­திக்கு சவால் விடுத்தார்.
Read More
Unknown

கொழும்பு வீட்டுப் பிரச்சினைகளை பரிசீலிக்க விசேட குழு அமைப்பு

கொழும்பு மாநகரத்தில் காணப்படும் வீட்டுப் பிரச்சினைகளை கண்டறிய நகர அபிவிருத்தி அமைச்சினால் பரிசீலனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரத்தில் தங்களது வதிவிடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அல்லது மீளமைவிடப்படுத்தப்பட்டுள்ள குறைந்த வசதிகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களையும், குறைபாடுகளையும் பரிசீலனை செய்து உரிய தீர்வுகளைக் காண்பதை நோக்கமாகக் கொண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கு அமையவும், அவரது கண்காணிப்பின் கீழும் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை பதிவுத் தபால் மூலமோ அல்லது நேரடியாகவே முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்.
Read More
Unknown

"அகர ஆயுதம்" ஏற்பாட்டில் இடம்பெற்ற மூன்றாவது கலை, இலக்கிய சந்திப்பு


 -மரியமின் புத்திரன்-

பொத்துவில் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் 2015-03-22ம் திகதி நடைபெற்ற  “அகர ஆயுதம்” கலை,இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொதுவெளி)  ஏற்பாடு செய்த மூன்றாவது கலை, இலக்கிய சந்திப்பு இரண்டு அமரவ்வுகளாக நடைபெற்றது. 

முதல் அமர்வுக்கு பொத்துவிலின் மூத்த இலக்கியவாதி "கலையன்பன் அஸீஸ்" அவர்கள் தலைமை வகித்து நிகழ்வை சிறப்பித்தார்.
Read More
Unknown

23 ஆண்டுகளுக்கு பின்னர் முதற் தடவையாக இறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து


உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது. தென்னாபிரிக்காவில் பிறந்த எலியட்டின் அதிரடியால் நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. 
உலகக் கிண்ணத் தொடரின் இன்று முதலாவது அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து-தென்னாபிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா துமலில் துடுப்பெடுத்தாடியது. 
Read More

Tuesday, March 24, 2015

Unknown

மஹிந்த சுதந்திரக்கட்சியில் போட்டியிடுவதற்கு தடையில்லை: யாப்பா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  சுதந்திரக் கட்சியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா  தெரிவித்தார். 
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட   அனுர பிரியதர்ஷன யாப்பாவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
Read More
Unknown

உத்தேச தேர்தல் சீர்திருத்தத்தில் சிறுபான்மையின மக்கள் பாதிப்பு:-


மஹிந்த அரசு கற்றுக் கொண்ட பாடங்களை 
மைத்திரி அரசும் கற்கும் நிலை ஏற்படலாம்!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
---------------------------------------
இன்றைய புதிய அரசாங்கமானது நாடாளுமன்றத் தேர்தலை ஒரு கலப்பு முறைமையின் கீழ் நடத்துவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு முனைப்புக் காட்டி வருகிறது.

புதிய முறையின் கீழும் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தற்போது போன்று 225 ஆக பேணப்படும் என்றும் அரச தரப்பு தெரிவிக்கிறது.


அதாவது, நாட்டின் 160 தேர்தல் தொகுதிகளில் இருந்தும் தலா ஒருவர் என்ற வீதம் 160 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இதற்கு மேலாக 50 உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாக விகிதாசார முறையிலும் மேலும் 15 பேர் உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் மூலம் தெரிவாவர். இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அங்கு வாழும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Read More
Unknown

கூறிய படி நாடாளுமன்றம் கலைகிறது.

நாடாளுமன்றம் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கலைக்கப்படும் என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றி கொள்வதற்காகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களையும் இணைந்துகொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சில சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது. புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. அந்த திட்டம் நடைமுறையில் இருக்கின்றது. அவை 100 நாட்களுக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
100 நாட்கள் வேலைத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜ§ன் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Read More
Unknown

மக்களை ஏமாற்றிவிட்டு மீண்டும் ஊழல் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டார் மைத்திரி

ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் புதிய அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­திகள் அனைத்தும் மீறப்­பட்­டு­விட்­டன. அமைச்­ச­ரவை எண்­ணிக்­கை­யினை அதி­க­ரித்து, தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தமை கண்­ட­னத்­திற்­கு­ரி­யது என்று விசனம் தெரி­வித்­துள்ள மக்கள் விடு­தலை முன்­னணி, அரசின் தேசிய நிறை­வேற்று சபையில் இருந்து வெளி­யே­ற­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டது.
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பலர் அர­சாங்­கத்­துடன் கைகோர்த்­தபின் நிமல் சிறி­பா­லடி சில்வா எதிர்க்­கட்சி தலை­வ­ரா­வாரா எனவும் அக்­கட்சி கேள்வி எழுப்­பி­யது.
Read More

Monday, March 23, 2015

Unknown

ஐ.தே.க. வின் வாலாக செயற்பட்டு மக்களை காட்டிக் கொடுத்துவிட்டது சுதந்திரக் கட்சி: விமல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டு தேசிய அரசாங்கத்தில் இணைந்ததன் மூலம் தமக்கு வாக்களித்த மக்களைக் காட்டிக்கொடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கியதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் வாலாக மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More