Featured Home (TOP)

Recent Comments

Sunday, May 31, 2015

Unknown

ரோஹிங்க்யா மறக்கப்பட்ட மக்கள் எனும் விஷேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு காத்தான்குடியில்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மியன்மார் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக சமூக வலைத் தளங்களில் பல பிழையான செய்திகளும் தொடர்பில்லாத புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

இது தவறானதாகும். உண்மையில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? அவர்கள் தற்போது எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினை யாது என்பதை மிக சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களான நாம் இப்பிரச்சினையை எவ்வாறு அணுக வேண்டும் என்பதில் முறையான கவனம் அவசியப்படுகிறது.
Read More
Unknown

அவர்கள் அடிமையானது, அவர்கள் குற்றம் மட்டுமல்ல..

(ஆர். இஸ்ஸதுன்னிஸா, மருத்துவபீடம் - கிழக்குப் பல்கலைக்கழகம்)

உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று.
சாதி இன மத பேதங்களைக் கடந்து அனைவரும் சமத்துவமாய் அணுகும் பிரதான விடயங்களுள் ஒன்று புகைத்தல், மது, போதை மருந்துப் பாவனை. 

இன்றைய சமூகத்தின் அவலங்களுள் ஒன்று நாம் சாதகமான விடயங்களிற்காக ஒன்றிக்க மறந்து சமூக சீரழிவுக்குரிய விடயங்களில் ஒன்றித்துக் கிடப்பது.

எல்லா மதங்களையும் விட்டு மிகத் தூரம் சென்றுவிட்டது போதை இன்று.
சாதாரண சிகரட் புகைத்தலில் இருந்து அதியுயர் வகை போதைப் பொருள் அடிமையாதல் வரை இன்று எதிர்பாரா தகவல்கள் தினம் தினம் எதிர்பாரா மனிதர்களிடமிருந்தும் சமூகங்களிடமிருந்தும்.
Read More
Unknown

காத்தான்குடியில் இடம்பெற்ற NFGG மக்கள் சந்திப்பு

(ஊடகப்பிரிவு,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று (30.05.2015) காத்தான்குடி குட்வின் சாந்தியில் இடம்பெற்றது.

நல்லாட்சிக்கான பிராந்திய சூறாசபை உறுப்பினர் வித்தியாகீர்த்தி MM.அமீரலி ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில் சமகால அரசியல் விடயங்கள், ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைப்பாடுகள் மற்றும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பங்குபற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

Read More
Unknown

காத்தான்குடியில்- புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் திறந்து வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சவூதி அரேபிய நாட்டு பிரமுகரின் நிதி உதவியுடன் ஒலுவில் பாலமுனை ஜம்மியதுஸ் சஹ்வா அல் கைரிய்யா அமைப்பின் அணுசரனையில் காத்தான்குடி -06ம் குறிச்சி பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் திறப்பு விழா 31-05-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை ளுஹர் தொழுகை நேரத்தில் இடம்பெற்றது.

மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் முஹம்மது அலியார் முஹம்மது அப்துர் ரவூப் தலைமையில் இடம்பெற்ற பள்ளிவாயல் திறப்பு விழாவில் ஜம்மியதுஸ் சஹ்வா அல் கைரிய்யா அமைப்பின் தலைவர் அஷஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம் அஷ்சூரி , சவூதி அரேபிய நாட்டு பிரமுகரகள்; ,ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அமீன் (பலாஹி), மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி ஷாஜஹான் (பலாஹி), கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ,உட்பட ஊர் பிரமுகர்கள்,உலமாக்கள்,பள்ளிவாயல் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Read More
Unknown

NFGG யுடனான நேரடிக் கலந்துரையாடலுக்கு நான் தயாா், எப்போது நேரம் தருவீா்கள்,,? புவி. றஹ்மதுழ்ழாஹ் கேள்வி

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கடந்த காலச் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள, விமர்சனங்களைக் கொண்டுள்ளவர்கள் தம்முடன் நேரடியாகக் கலந்துரையாடி தமது அதிருப்திகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பில் உரிய தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றின் கடந்த காலச் செயற்பாடுகளில் தனக்குள்ள அதிருப்திகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து உரிய தெளிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு அடுத்து வரும் பகிரங்கப் பொதுக்கூட்டம் ஒன்றில் சந்தர்ப்பம் வழங்குமாறு 'வார உரைகல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More
Unknown

யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பதிவுகளை மேற்கொண்டுள்ள மக்களுக்கான பொது அறிவித்தல்

(ஊடகப்பிரிவு,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)
வீடமைப்பு அமைச்சின் நிதியின் கீழ் வீடுகளைத் திருத்தியமைப்பதற்காக குடும்பமொன்றுக்கு 100,000.00 ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உதவித்திட்டம் தற்போது பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்கு விஷேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் குடும்பப்பதிவுகளைக் (அ காட்களைக்) கொண்டிருக்கின்ற அனைவரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். எனினும் போதியளவு விண்ணப்பங்கள் தம்மை வந்துசேரவில்லை என யாழ்ப்பாணம் பிரதேச செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Read More
Unknown

செய்தி ஒன்றுக்காக ஊடகவியலாளரைக் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டா? பருத்தித்துறை நீதவான் கேள்வி! கைது செய்யப்பட்டிருந்த யாழ். ஊடகவியலாளர் விடுதலை!

(புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

யாழ்ப்பாணத்தில் பிராந்திய பத்திரிகை ஒன்றில் பிரசுரமான செய்தி தொடர்பில் விசாரணைக்குட்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர், விடுதலை செய்யப்பட்டார்.

போதுமான குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக இல்லை என்றும், செய்தி ஒன்றுக்காக ஊடகவியலாளர் ஒருவரைக் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டா? இல்லையா? என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும் தெரிவித்து பருத்தித்துறை நீதவான் எம். கணேசராஜா அவரை விடுதலை செய்தார்.
Read More

Saturday, May 30, 2015

Unknown

கள்ள நோட்டு வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு!!

(புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

கள்ள நோட்டுகள் வைத்திருப்பதால் மட்டும் ஒருவரை குற்றவாளி என்று கருதி விட முடியாது என்று கூறிய மும்பை ஐகோர்ட்டு, கீழ்கோர்ட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுவித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

மும்பையில் பஞ்சாப் நேசனல் வங்கியின் குர்லா கிளைக்கு கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி முன்ஷி முகமது ஷேக் என்ற வாடிக்கையாளர் வந்தார். அவர் வங்கியில் ரூ.500 மதிப்புள்ள 17 நோட்டுகள், ரூ.1000 மதிப்புள்ள ஒரு நோட்டு என மொத்தம் ரூ.9,500-யை டெபாசிட் செய்தார். அதில் சில கள்ள நோட்டுகள் இருப்பதாக காசாளர் சந்தேகப்பட்டார்.
Read More
Unknown

காத்தான்குடியில் நாளை 'மஸ்ஜிதுர் ரஹ்மா' புதிய பள்ளிவாசல் திறப்புவிழா

(புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

காத்தான்குடி 6ம் குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'மஸ்ஜிதுர் றஹ்மா' பள்ளிவாசல் நாளை (31.05.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு திறந்து வைக்கப்படும் என அப்பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்போது பிரதம அதிதியாக துருக்கி பின் ஜாபிர்அல் கிதாமி அல் உதைமி அவர்களும், விஷேட அதிதியாக அல்ஹாஜ் ஐ.எல்.எம். ஹாஷிம் அஷ்சூரி அவர்களும் கலந்து கொள்ள இருப்பதுடன் உள்ளுர் உலமாக்கள், பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இப்பள்ளிவாசல் நிர்மானத்திற்கான முழுமையான அனுசரணையை அட்டாளைச்சேனை, ஒலுவில் பாலமுனையைச் சேர்ந்த ஜம்இய்யதுல் சஹ்வா அல் கைரிய்யா நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Read More
Unknown

பாலமுனை கிராமத்தில் மேலதிக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை ஏற்படுத்துமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணிப்பு! -ஜ.தே.க. அமைப்பாளர் முஸ்தபாவின் நடவடிக்கைக்கு கிராம மக்கள் பாராட்டு-


(புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

மட்டக்களப்பு மாவட்டம், ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனைக் கிராமத்திற்கு மேலதிக கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளை ஏற்படுத்துமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்கிராமமானது  1990 காலப்பகுதிக்குப் பின்னர் இரண்டு கிராம சேவகர் பிரிவாகக் காணப்பட்ட போதிலும் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் இது ஒரு கிராம சேவகர் பிரிவாக மாற்றப்பட்டது.
Read More
Unknown

பல்கலைக்கழக, உயர்கல்வி கற்போருக்கான வருடாந்த இஜ்திமா.


கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய பல்கலைக்கழக, உயர்கல்வி கற்போருக்கான வருடாந்த இஜ்திமா இம்முறை காத்தான்குடியில் அல்லாஹ்வின் உதவியால் இலங்கையில் உள்ள அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான இஸ்லாமிய ஆன்மீக ஒன்று கூடல் வருடா வருடம் தப்லீக் ஜமாஅதினால் எந்த இயக்க வேறுபாடுகளும் இன்றி மாணவர்களின் ஈமானிய சிந்தனையை அதிகரிக்கும் நோக்குடனும், தான் கற்க கூடிய காலத்திலும், எந்த சூழலிலும் ஒவ்வொரு மாணவர்களும் அல்லாஹ்வின் கட்டளைகளை பேணி, தன்னை சுவனதுக்காக தயார் படுத்த வேண்டும் என்ற கவலையிலும், அனைத்து கலிமா சொன்ன மாணவர்களும் தங்களுக்குள்ளும்,   மா ற்று மதத்தவர்களுடனும் ஒற்றுமையாக நல்லுறவுடன் வாழ வேண்டும் என்ற பல இன்னும் பல கருத்துக்களை உள்வாங்கி ஈமானிய ஆன்மீக ஒன்று கூடல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
Read More
Unknown

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுக்கூட்ட நிகழ்வுகள் நேரடி ஒலி ஒளிபரப்பு - எமது அவதானி இணையத் தளத்திலும்


Read More
Unknown

எஸ்.எஸ்.ஓ மதிதயனின் படுகொலை மிலேட்சத்தனமானதும், கண்டிக்கத்தக்கதுமாகும். -மாகாண அமைச்சர் மன்சூர் கண்டனம்-


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்த சச்சிதானந்தம் மதிதயன் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் மிலேட்சத்தனமாக சுட்டுக் கொல்லப்படடிருப்பது வேதனையானதும், கண்டிக்கத்தக்கதுமாகும் என மாகாண சுகாதாரத்துறை, சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கண்டனந் தெரிவித்துள்ளார்.

சச்சிதானந்தம் மதிதயனின் படுகொலை குறித்து கிழக்கு மாகாண சுகாதாரத்துறை, சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கிராமிய மின்சார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
Read More
Unknown

பர்மா இன படுகொலைக்கு எதிராக சவூதியில் ஆர்ப்பாட்டம்..


பர்மா முஸ்லிம்களுக்கு இழக்கப்படும் இன படுகொலைக்கு எதிராகவும். இவ்அநீதிகள் நிறுத்தப்படல் வேண்டும் எனக்கோரியும் நேற்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் சவூதிஅராபியா ஜித்தாவில் அமைதி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.


இவ் ஆர்ப்பாட்டத்தில் ஜம்பதுக்கு மேற்பட்ட சவூதி வாழ் தமிழ்,முஸ்லிம் இலங்கை பணியாளர்கள் கலந்துகொண்டனர்..



(ஜுனைட்.எம்.பஹ்த்)
(படம்-முஹம்மது பஸ்ஹான்)




Read More
Unknown

ஹிஸ்புல்லாஹ் எம்.பியுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் என தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாகம் சவால்!

பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்த பௌத்தா்கள் சிலரினால் தம்புள்ளை பள்ளி வாயல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடா்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சா் ஹிஸ்புல்லாஹ் அவா்கள், அப்படியொன்றும் அங்கு நடை பெறவில்லை என்று  மறுத்துரைத்தது கருத்து வெளியிட்டிருந்தார்

இந்த விடயம் தொடா்பில் ஹிஸ்புல்லாஹ்வுடன் விவாதம் செய்வதற்கு தம்புள்ள பள்ளிவாயல் நிருவாகம் தயார் என சவால் விட்டிருக்கிறது.

நேற்று (29.05.2015) வெள்ளிக்கிழமை 'விடிவெள்ளி' வார இதழில் வெளியான கட்டுரை வாசகா்கள் பார்வைக்காக இத்துடன் இணைக்கப்படுகிறது.



(தகவல் - புவி எம்.ஐ.றஹ்த்துல்லாஹ்)

Read More
Unknown

காத்தான்குடியில் இன்றிரவு (30.05.2015)நடைபெறவுள்ள NFGGயின் மாபெரும் பொதுக்கூட்டம்

நல்லாட்சிக்ான தேசிய முன்னணி இன்று(30.05.2015) காத்தான்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளது இன்றிரவு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் உள்ளுா் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேசிய அரசியல் நிலைப்பாடு தொடா்பாகவும் விசேட உரைகள் நிகழ்த்தப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயணடையுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அனைவரையும் அன்புடன் அழைக்கிறது

இது தொட்பாக அவ்வியக்கம் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

தகவல்
புவி.எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ்


Read More

Friday, May 29, 2015

Unknown

பர்மா முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் பேரணியும் ,ஆர்ப்பாட்டமும்--படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் பர்மா முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும் ,இக் கொடுமைகளுக்கு எதிராக இலங்கை அரசு கண்டனத்தை வெளியிட வேண்டுமெனக் கோரியும் மாபெரும் பேரணியும் ,ஆர்ப்பாட்டமும்  மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இன்று 29 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் இடம்பெற்றது.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான மக்கள்,இளைஞர்கள்,சிறுவர் ,சிறுமிகள் , நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Read More
Unknown

"அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முதல் நடவடிக்கையே பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை"

அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்பும் முதல் நட­வ­டிக்­கை­யாக எதிர்­வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி, பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்­துக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யொன்றை சமர்ப்­பிக்­க­வுள்ளோம் என முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார்.

மேலும் மைத்­திரி அர­சாங்­க­மொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தாக கூறிய இந்த அரசு தற்­போது வைராக்­கி­ய­மா­ன­தொரு ஆட்­சி­யையே நடத்தி வரு­கின்­றது எனவும் தெரி­வித்தார்.
கொழும்பு நார­ஹேன்­பிட்டி அபே­ராம விகா­ரையில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
Read More
Unknown

ரோஹிங்யாக்கள் என்னும் மனிதர்கள்!

”ரோஹிங்யா” இன்றெல்லாம் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி நாம் கடந்துவரவேண்டிய ஒரு சொல். ஜீரணிக்கமுடியாத கொடூர புகைப்படங்களோடு பகிரப்படும் செய்திகள் சமூக வலைத்தளங்கள் முழுவதையும் இரத்தத்தால் நிரப்பியிருக்கிறது. இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றி சரியான தெளிவின்மையும் அறியாமையும் இன்னும் இன்னும் இந்த தீவிர சமூகவலைத்தள பகிர்வுகளுக்கும் இனத்துவேச வார்த்தைகளுக்கும் வழிகோலுகின்றன. இதைப்பற்றி கொஞ்சம் அலசவேண்டும் என காத்திருந்த எனக்கு இன்று நேரம் வழிவிட்டுக்கொடுத்திருக்கிறது.

முதலில் ரோஹிங்யா எனப்படும் முஸ்லிம்கள் யார் என்பதை அவர்களுக்காக குரல் கொடுக்கும் அனைவரும் தெரிந்திருத்தல் அவசியம். அது ஒரு நீண்ட கதை. இப்பொழுது மியன்மார் உலகின் இனஅழிப்பில் ஈடுபடும் மனிதாபிமானமற்ற நாடுகளின் பட்டியலில் முதல் இடங்களில் இருக்கிறது.
Read More

Thursday, May 28, 2015

Unknown

பசிலின் மனைவயின் கணக்கிற்கு சீன நிறுவனமொன்றிலிருந்து கோடிக் கணக்கான பணம்!

கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற துறைமுகம்நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட சீனா நிறுவனத்தினால் 600 மில்லியன் ரூபாய் புஷ்பா ராஜபக்ச என்ற அறக்கட்டளையின் வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்சவின் கீழ் குறித்த அறக்கட்டளை இயங்கப்பட்டுள்ளது.
துறைமுகம் நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியின் பொறுப்பாளரான Colombo International Container Terminal என்ற நிறுவனம் ஒரே காசோலையில் நேரடியாக குறித்த 600 மில்லியன் பணத்தை புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளை வங்கி கணக்கில் வைப்பு செய்துள்ளனர்.
குறித்த நிறுவனம் அறக்கட்டளையாக நிறுவப்பட்டிருந்தாலும், அதனை உருவாக்கியவர்கள் அந்த அறக்கட்டளையின் பணத்தினை தனிப்பட்ட முறையில் மாத்திரம் பயன்படுத்துவதாக நிதி குற்றப் புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது.
அவ் சீன நிறுவனத்திற்குரிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பின்னாள், முன்னாள் அரசியல் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சீனா நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் போது குறித்த அரசியல் முக்கியஸ்தர் அவரது நிறுவனத்திற்கு சேர வேண்டிய 600 மில்லியன் தரகு பணத்தினை நேரடியாக பெற்றுக்கொள்ளாமல் புஷ்பா அறிக்கட்டளை கணக்கில் வைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தகவல்கள் உறுதியாக்கப்பட்ட பின்னர் இவ் ஊழல் மோசடியில் தொடர்புடையவர் குற்றபுலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
srilanka mirror
Read More
Unknown

சச்சிதானந்தம் கொலை: கொலையாளியை கண்டு பிடியுங்கள்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம்  சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரி சமூக சேவை உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்னால் இன்று (27.05.2015) புதன்கிழமை காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலுமுள்ள சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆயுத கலாசாரத்தை ஒழியுங்கள், கொலையாளியை கண்டு பிடியுங்கள், அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள், விரைவாக தண்டனை வழங்குங்கள், அரச உத்தியோகத்தருக்கு பாதுகாப்பு தாருங்கள், நிதியினை நிலை நாட்டுங்கள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்; கொலையாளியை விரைவாக கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த உதவுங்கள் என ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் முகமாக மகஜர் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் கையளிக்கப்பட்டது.


அவ்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
'எமது சக உத்தியோகத்தரான சச்சிதானந்தம் மதிதயன் அவர்கள் 2015.05.26ம் திகதி அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் மண்டூரில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குடும்பஸ்தரான இவர் கடந்த 1999ம் ஆண்டிலிருந்து சமூக சேவை உத்தியோகத்தராக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே இத்துக்ககரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தினை வண்மையாக கண்டிக்கின்றோம்.
நாட்டில் வன்செயல்கள் ஓய்ந்து நல்லாட்சி நிலவும் இவ்வேளையில் இவ்வாறான ஒரு துப்பாப்பிச் சூடு நிகழ்ந்துள்ளது. மழை ஓய்ந்தும் துவானம் முடியவில்லை என்பது போல இந்நிலை காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான குற்றவாளிகளை வளரவிடாது உடனடியாக கொலைக்கான காரணத்தினையும், சூத்திதாரிகளையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவதன் மூலம்  நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதுடன், அரச உத்தியோகத்தரிடையேயும், பொதுமக்களிடையேயும் காணப்படும் பீதியை தடுத்து நிறுத்த உதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்” என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.'

- viraksary
Read More
Unknown

காத்தான்குடி ஊர்வீதி அபிவிருத்தியும் ஏமாந்து காத்திருக்கும் பொதுமக்களும்

-எம்.எச்.எம்.அன்வர்-

காத்தான்குடியில் பழைய கல்முனை வீதி என அழைக்கப்படும் ஊர் வீதி அபிவிருத்தியானது ஆரையம்பதியிலிருந்து 600 மீட்டரும் மஞ்சந்தொடுவாயிலிருந்து 600 மீட்டரும் வடிகான்களுடன் கூடிய வீதியாக தற்போது புனரமைப்பச்செய்யப்படுகிறது.

இவ்வீதி விஸ்தரிப்பின் நடுப்பகுதி எப்போது புணரமைப்பச்செய்யப்படும் என அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர் இதில் பலர் வீடுகளையும் மதில்களையும் உடைத்து விட்டனர்
Read More

Wednesday, May 27, 2015

Unknown

ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்றவியல் பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்

இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவை விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதிமோசடி தவிர்ப்புப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று தமது பிரிவுக்கு சமுகம தருமாறு அந்த பிரிவு கேட்டுள்ளது.
சிறிலிய சவிய என்ற அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே சிராந்தி விசாரணை செய்யப்படவுள்ளார். இந்த அமைப்புக்கு சிராந்தியே போசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
Unknown

எதிர்க்கட்சிகள் பலமிருந்தால் பாராளுமன்றத்தை கலைத்துக்காட்டட்டும் : ரவி கரு­ணா­நா­யக்க

பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை நடத்­து­வ­தற்கே எதிர்க்­கட்­சிகள் முயற்­சிக்­கின்­றன. அவ்­வா­றாயின் எதிர்க்­கட்­சிக்கு முடி­யு­மாக இருந்தால் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்துக் காட்­டு­மாறு நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சவால் விடுத்தார்.

இந்த பாரா­ளு­மன்­றத்­தினால் நீண்ட காலம் பய­ணிக்க முடி­யாது. நிரந்­த­ரமான அர­சாங்­க­மொன்றை நிறு­வு­வ­தற்கு புதிய பாரா­ளு­மன்றம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அத­னூ­டாக திரு­டர்­களின் உண்­மைகள் வெளிவரும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
எமக்கு ஆட்­சியை ஒப்­ப­டை­யுங்கள். பாரா­ளு­மன்­றத்தை நாம் கலைத்துக் காட்­டுவோம் என்று தினேஷ் குண­வர்­தன எம்.பி.விடுத்த சவால் தொடர்பில் வின­விய போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
Read More
Unknown

முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும் : MCSL ஜனாதிபதிக்கு கடிதம்


அரசியலமைப்பு சபைக்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவரையும் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையில் உள்ள 125 முஸ்லிம் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் கவுன்சில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்,எம். அமீன் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபையின் முக்கிய உறுப்பினர்கள் நால்வர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More

Tuesday, May 26, 2015

Unknown

கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்10 இலட்சம் ரூபா சரீர பிணையிலும் 5000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தேரர்,கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Read More
Unknown

ஊடகவியலாளர்களுக்கான விசேட வீட்டுத்திட்டம்

ஊடகவியலாளர்களின் நலன்புரிக்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான விசேட வீட்டுத்திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது என ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர கயந்த கருணாதிலக்க நேற்று (25) தெரிவித்தார்.
 
ஹோமாகம- தியகம- மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கிற்கு  அண்மையில் உள்ள இலங்கை ஒளிபரப்புக்குட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் காணியிலேயே இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
Read More
Unknown

'நீதியின் நிரல்' – நூல் வெளியீட்டு விழா

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம், அதன் அங்கத்தவர்களான சமாதான நீதிவான்களின் விபரங்களடங்கிய தொகுப்பு நூல் ஒன்றினை 'நீதியின் நிரல்' எனும் தலைப்பில் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி மண்டபத்தில் அண்மையில் வெளிட்டு வைத்தது.
Read More
Unknown

ஞானசார தேரர் கைது

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டோக்கியோவிலிருந்து நேற்று நாடு திரும்பிய ஞானசார தேரர் குருந்துவத்த பொலிஸ் நிலையத்தில் இன்று காலை வாக்குமூலம் ஒன்றை அளித்தன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Read More
Unknown

விசா இல்லாமல் இலங்கை பயணிகள் இந்தியாவிற்குள் வர முடியா


விசா இன்றி இலங்கை பயணிகள் இந்தியாவிற்குள் வர முடியாது என,இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஈ-விசா முறையை மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக கூறிய நடராஜன்,ஈ-விசா என்றால்,விசா இல்லாமலேயே இந்தியாவிற்கு செல்ல முடியும் என கருதி, பலர் விமான டிக்கெட் மாத்திரம் எடுத்து கொண்டு விமான நிலையம் வந்து, பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக தெரிவித்தார்.
Read More

Monday, May 25, 2015

Unknown

நான் இன்னும் சாகவில்லை பதிலடி கொடுத்த மஹிந்த.

“நான் இன்னும் சாகவில்லை. அப்பா இன்னும் இருக்கிறேன் என்று கூறத்தான் இங்கு வந்தேன்” என்று கூறி, அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்ததையடுத்து கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா, அப்பா இறந்துவிட்டார் என்று கூறியிருந்தார்.

இவரின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிபிலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- தற்போது பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பிப்பதில்லை. பிரதமர்தான் உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றார். தீர்மானிப்பதும் அவர்தான். அமைச்சரவையில் ஒரு குழுவுள்ளது.

அதற்கு மேலாக தேசிய நிறைவேற்றுச் சபை என்ற ஒன்றுள்ளது. அதில் ஜே.வி.பியும் அங்கம் வகிக்கின்றது. யானையின் கழுத்தில் மணி கிடப்பதாக ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறியுள்ளார். மாற்றம் ஒன்று வேண்டும் என்றும்தான் மக்கள் வாக்களித்தனர். அதை நாம் ஏற்றுக்கொண்டோம்.

ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, கட்சியின் தலைமைப் பதவி வேண்டும் என்று என்னிடம் வந்து கேட்டனர். அதையும் கொடுத்தேன். வீட்டுக்குச் சென்று சற்று ஆறுதலாக இருந்தேன். அதன்பின்னர் என்மீது தொடர்ச்சியாக சேறுபூசத் தொடங்கினர். நானும், அதற்குப் பதிலடிகொடுக்க ஆரம்பித்தேன்.

இவற்றை கடவுளிடம்தான் சொல்லமுடியும். அதனால் விகாரைகளுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டேன். இதுபோன்ற திரிபுபடுத்தப்பட்ட அரசு; பழிவாங்கும் அரசு. நான் இன்னும் சாகவில்லை என்று கூறத்தான் இங்கு வந்தேன். அப்பா இன்னும் இருக்கிறேன் – என்று கூறியுள்ளார் மஹிந்த.
-JVP news

Read More
Unknown

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியா பயணம்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  இன்று 25 திங்கட்கிழமை மதியம் சவூதி அரேபிய நாட்டுக்கு பயணமானார்.

ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி அமைப்பினுடனான கலந்துரையாடலில்  கலந்து கொள்வதற்காக இன்று சவுதி சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் முதலில் உம்ரா கடமையை நிறைவேற்றிவிட்டு அதன் பின்னர் ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி அமைப்பின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லாஹ் அஸ் ஷிர்கியையும் ,சர்வதேச இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியினுடைய தலைவர்,முஸ்லிம் சமய கலாசார வக்பு அமைச்சினுடைய பிரதிநிதிகள்,உயர் கல்வி அமைச்சினுடைய பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Read More
Unknown

காட்டு யானை ஊடுருவல் : 4 குடியிருப்புக்கள் சேதம்

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லதண்ணியோடை பிரதேசத்தில் உட்புகுந்த காட்டு யானையொன்று அங்குள்ள நான்கு குடியிருப்புக்களை  சேதப்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்குள் 70 க்கும் மேற்பட்ட  ஏக்கர் வயல் பயிர் நிலங்கள் யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன. 
இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கடந்த வருடமும் இது போன்று நூற்றுக்கணக்கில் வீடுகளை உடைத்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர் நிலங்களையும் யானை அழித்திருந்தது. இந்த நிலையில் இவ்வருடம் இப்பிரதேசத்திற்குள் புகுந்துள்ள யானையானது 2500  - 3000 ஏக்கர் வரையில் பயிர்களை அழிக்கும் என்பதுடன் கடந்த வருடம் போன்று வீடுகளையும் உடைக்கும் என பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த வருடத்தில் வீடுகள் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நட்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை.

காட்டு யானைகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு குறிப்பிட்ட யானைகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லுதலாகும். அத்துடன் யானைப்பாதுகாப்பு வேலிகளையும் அமைத்தல் வேண்டும். அத்துடன் தொடர்ச்சியான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார்.
Read More

Sunday, May 24, 2015

Unknown

காத்தான்குடி பிரதேச முஸ்லிம் ஊடகவியலாளர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் விஷேட சந்திப்பு- ஓடியோ முழுமையாக இணைப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று 24 ஞாயிற்றுக்கிழமை மதியம் காத்தான்குடி கயா பேக்கரி அன்ட் ரெஸ்டுரெண்டில் வைத்து விஷேடமாக சந்தித்து கலந்துரையாடினார்.

இதில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்கள் , எஸ்.எம்.எஸ்.குறுஞ் செய்தியாளர்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் சுபைர் ,முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Read More
Unknown

ஊடகவியலாளர்களின் சட்ட பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை –மட்டக்களப்பில்-படங்கள்.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இலங்கை இணைய ஊடகவியலாளர் சங்கம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம் ஆகியன இணைந்து றைட்ஸ் நைவ் அமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா - ஊடகக் கற்கைகள் நிறுவன அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான சட்ட பாதுகாப்புக்கான பயிற்சிப்பட்டறை நேற்று 23 சனிக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளத்தின் தலைவர் எல்.தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சிப்பட்டறையில் கருத்துத் தெரிவித்த தேவ அதிரன், ஊடகவியலாளர்களுக்கான சட்டத்துறை சார்ந்த அறிவு, அதுசார்ந்த தேவைகள் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.
Read More
Unknown

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் மாசிலாமணியின் கருத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி முகாமையாளர் முபாறக் கண்டனம்


ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் மாசிலாமணியின் கருத்தை ஐக்கிய
தேசியக் கட்சியின் காத்தான்குடி முகாமையாளர் வி.ரி.எம்.முபாறக்
கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி
முகாமையாளர் வி.ரி.எம்.முபாறக
வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஐக்கிய
தேசியக் கட்சியின் கல்குடா தொகுதி
அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ். மாசிலாமணி
மட்டக்களப்பில் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்க சிலர்
முயற்சி என்ற தலைப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருப்பதை நான்
வன்மையாக கண்டிக்கின்றேன்.
Read More
Unknown

இன்று நடைபெறவிருந்த NFGGயின் பொதுக்கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று (24.05.2015) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி குட்வில் சந்தியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் நடைபெற மாட்டாது என்று NFGG  தெரிவித்துள்ளது.
மேற்படிப் பொதுக்கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
Read More

Saturday, May 23, 2015

Unknown

வாக்காளர் இடாப்பில் மண்முனை முஸ்லிம்களை பதிவதற்கு கிராம உத்தியோகத்தர் மறுப்பு ..


மண்முனை பற்று பிரதேச எல்லைக்குள் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுடைய வாழ்வுரிமைகளைப் பறிக்கின்ற ஓர் திட்டமிடப்பட்ட செயல் கன கச்சிதமாக செயற்படுத்தப் பட்டு வருகின்றது.


ஒவ்வொரு வருடமும் குறிப்பிட எண்ணிக்கையான முஸ்லிம் மக்களை வாக்காளர் இடாப்புக்களில் இருந்து நீக்குவதனூடாக மண்முனை பற்று பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களை
நிருவாக செயற்பாட்டு ரீதியாக வெளியேற்றுகின்ற நடவடிக்கை மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
Read More
Unknown

வில்பத்து விவகாரம் முழுமையான அரசியல் இலாபநோக்கிலே சிலரால் கையாளப்படுகின்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவிப்பு

(ஊடகப்பிரிவு,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)
வில்பத்து விடயமாக வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் குறுக்கீடு செய்ததாக வடக்கு மாகாணசபையின் மற்றுமொரு எதிர்கட்சி உறுப்பினர் ஜவாஹிர் அவர்கள் ஊடகங்களிலே கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து உங்களது கருத்து என்ன என்று வடக்கு மாகாணசபையின் ஆளும்தரப்பு முஸ்லிம் உறுப்பினர் அ.அஸ்மின் அவர்களிடம் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில்..
Read More
Unknown

பெரியமடு கிராம மீள்குடியேற்றம் தொடர்பான பிரேரணை வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அ.அஸ்மின் அவர்கள் முன்வைத்தார்

(ஊடகப்பிரிவு,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)
21.05.2015 அன்று வடக்கு மாகாணசபையின் 29வது அமர்வின்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. .அஸ்மின் அவர்கள் முன்வைத்த ெரியமடு கிராம மீள்குடியேற்றம் தொடர்பான பிரேரணை மற்றும் அதன் பின்னணி விளக்கம்
பிரேரணை;  மன்னார் மாந்தை மேற்கு பெரியமடு கிராமத்தின் மீள்குடியேற்றத்தினை ஊக்குவிக்கும் அடிப்படையில் இராணூவத்தினரால் கையகபடுத்தப்பட்டுள்ள அம்மக்களின் விவசாயக் காணிகளை விடுவிப்பதற்கும், நீண்டகாலமாக செய்கை பண்ணப்படாதிருந்த விவசாயக் காணிகளை விவசாயத்திற்கு உகந்த விதத்தில் மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மத்திய மீள்குடியேற்ற அமைச்சையும், மாகாண விவசாய அமைச்சையும், மாகாண காணித் திணைக்களத்தினையும்  இச்சபை கோருகின்றது.
Read More